ஞாயிற்றுகிழமையும் கொரோனா நிவாரண நிதி பெற டோக்கன் வழங்க தமிழக அரசு உத்தரவு

0 1266
தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் ஞாயிற்றுகிழமையும் கொரோனா நிவாரண நிதி பெற டோக்கன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் ஞாயிற்றுகிழமையும் கொரோனா நிவாரண நிதி பெற டோக்கன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நிவாரண நிதி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்த நிலையில் வருகிற 15-ம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க கடந்த 2 நாட்களாக வீடு வீடாக மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் 16ஆம் தேதி ஞாயிற்றுகிழமையும் மக்களுக்கு டோக்கன் வழங்க அரசு  உத்தரவிட்டுள்ளதோடு இதற்கான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments