இந்தியாவில் 18 மாநிலங்களில் குறைந்தும் 16 மாநிலங்களில் அதிகரித்தும் வரும் தினசரி கொரோனா பாதிப்பு

0 5994
இந்தியாவில் 18 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 13 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரும், ஆறு மாநிலங்களில் 50,000 முதல் ஒரு லட்சம் கொரோனா நோயாளிகளும் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஆந்திரா, டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, தெலுங்கானா, உள்ளிட்ட 18 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துவருவதாகவும், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட 16 மாநிலங்களில் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக ராஜேஷ் பூஷண் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments