கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களை தடியடி நடத்தி விரட்டிய போலீசார்

0 2545
கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களை தடியடி நடத்தி விரட்டிய போலீசார்

ர்நாடகத்தில், முழு ஊரடங்கு  அமலுக்கு வந்ததையடுத்து, பெங்களூருவில் தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.

அங்குள்ள காய்கறி, மளிகை  உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள், காலை 6 மணி முதல், 10 மணி வரை என 4 மணி நேரம் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பொருட்களை வாங்க பொதுமக்கள் முக்கிய சாலைகளில் வாகனங்களில் வந்து குவிந்தததால், போலீசார் தடியடி நடத்தி விரட்டியதுடன் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

அது மட்டுமின்றி சில வாகனங்களுக்கு அபராதம் விதித்து தேவையின்றி சென்றவர்களை தோப்புக்கரணம் போட வைத்து கலைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments