கோவை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் நோயாளிகள்

0 2738
கோவை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் நோயாளிகள்

கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த 10க்கும் மேற்பட்டநோயாளிகள் படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்ஸ்களிலேயே காத்திருக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பரவலால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் முழுவதுமாக நிரம்பிவிட்டன.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கை வசதி தேவைப்படும் நோயாளிகளின் பெயர்களை பதிவு செய்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவசர மருத்துவ உதவிக்காக வந்த நோயாளிகள் கடந்த 3 மணி நேரமாக ஆம்புலன்ஸ்களிலேயே காத்திருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments