சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.04 சதவீதம் சரிவு

0 3206
சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.04 சதவீதம் சரிவு

சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.04 சதவீதம் சரிந்திருப்பதாக அந்நாடு நடத்திய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவில் தெரியவந்துள்ளது.

2000 முதல் 2010ஆம் ஆண்டு வரை சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.57 சதவீதமாக இருந்தது. இந்த அளவு 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் 0.53சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த மக்கள்தொகையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையும், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

ஆனால் 15 முதல் 59 வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக சரிந்திருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments