10, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம்

0 46607
10, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம்

10 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறுமென பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்ததால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதோடு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், 10, 12 வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு எப்போது என்பது குறித்து கேள்வி எழுந்தது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு 12 ஆம் பொதுதேர்வு நடத்தப்படும் என்றும், தனித்தேர்வர்களுக்கும் அதேநேரத்தில் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தனர்.

மேலும், தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 14417 என்ற பள்ளி கல்வித்துறை எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments