அனுமதியில்லா கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்... உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்.

0 1588
அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

சென்னை நெற்குன்றத்தில் சிலர் சென்னை பெருநகர வளர்ச்சி குழும விதிகளை மீறி கட்டிடம் கட்டுவதற்கு தடை விதித்து 2016 ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த கோரி ஸ்டீபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அதன் விசாரணையில், கட்டுமான பணிக்கு தடை விதித்த அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டதாலும், பொறியாளர் மரணமடைந்து விட்டதாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி பதிலளித்தது.

அதை கேட்ட நீதிபதிகள், நோட்டீசின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

குறிப்பிட்ட உத்தரவின் மீது நடவடிக்கை எடுக்காத து குறித்தும், அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments