தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை கூடியது... புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பதவி ஏற்பு உறுதிமொழி..!

0 6242
தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை கூடியது... புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பதவி ஏற்பு உறுதிமொழி..!

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 16ஆவது சட்டப்பேரவையின் உறுப்பினர் ஆக பதவியேற்றுக் கொண்டார். 

இன்று காலை 9 மணிக்கு முன்னதாகவே, புதிய உறுப்பினர்கள் கலைவாணர் அரங்கம் வரத்தொடங்கினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தபோது அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பளிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, போடி தொகுதி எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் கலைவாணர் அரங்கம் வந்திருந்தனர்.

காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏ ஆக பதவியேற்றுக் கொண்டார். தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, பதவியேற்பு உறுதி செய்துவைத்தார். "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" எனக் குறிப்பிட்டு, "உளமார உறுதிகூறுகிறேன்" என அவர் பதவியேற்றுக் கொண்டார்.

முதலமைச்சரைத் தொடர்ந்து அமைச்சர்களும் உளமார உறுதி கூறி பதவியேற்றனர்.

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கடவுள் அறிய" எனக் கூறி பதவியேற்றுக் கொண்டார். இதேபோல, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற கட்சி தலைவர்கள் பதவியேற்றனர்.

இதைத் தொடர்ந்து அகர வரிசைப்படி, மற்ற உறுப்பினர்களும் வரிசையாக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனிடையே கொரோனா பேரிடரிலிருந்து தமிழகத்தை மீட்பதற்கு ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்பதைக் கடந்து மக்களின் பிரதிநிதிகளாகச் செயலாற்றுவோம், அனைவரும் இணைந்துநிற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments