தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் 2-வது நாளாக வீடு வீடாக விநியோகம்

0 1610
தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் 2-வது நாளாக வீடு வீடாக விநியோகம்

மிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக தலா 2ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன் 2-வது நாளாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா நிவாரண நிதி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். வருகிற 15-ம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் 2ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுகிறது.

அதற்கான டோக்கன் வீடு வீடாக 2-வது நாளாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. டோக்கனில் குறிப்பிட்டிருக்கும் தேதி, நேரத்திற்குச் சென்று நியாய விலைக்கடைகளில் கொரோனா நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

கொரோனா காரணமாக, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்படவில்லை, அவர்களுக்கு வேறொரு நாளில் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments