திமுக ஆட்சியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது -அமைச்சர் சேகர் பாபு

0 4337
திமுக ஆட்சியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது -அமைச்சர் சேகர் பாபு

ஸ்ரீரங்கம் ஜீயர் நியமனத்தை இந்து அறநிலைய துறையே ஏற்று நடத்த உள்ளதாக கூறப்படுவது பற்றி, அதிகாரிகளுடன் ஆலோசித்து விளக்கம் அளிப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகே, ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிய பின் செய்தியாளர்கள் சந்தித்த அவரிடம், ஈஷா யோகா மையம் மீதான புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டனர். திமுக ஆட்சியில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என அமைச்சர் பதிலளித்தார்.

இந்து அறநிலையத்துறையே ஸ்ரீரங்கம் ஜீயரை நியமிக்கும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட தகவலை தாமும் பார்த்ததாகவும், அதன் உண்மைத் தன்மை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தெரிவிப்பதாகவும் சேகர்பாபு பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments