உடல் பாதிப்புகளுடைய மக்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடும் பணி - மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம்

0 694
உடல் பாதிப்புகளுடைய மக்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடும் பணி - மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம்

டல் பாதிப்புகளுடைய மக்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.

கோவிட் மருத்துவ உபகரணங்கள் தடுப்பூசிகள் விநியோகம் தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் தானாக எடுத்துக் கொண்டு பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடர்பான பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. தடுப்பூசிகளுக்கான விலை நிர்ணயம் என்பது உடனடியாகத் தீர்வுகாணக்கூடிய பிரச்சினை அல்ல என்றும் காலப்போக்கில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் வெளிநாடுகளில் இருந்து மருத்துவ உதவிகள் அதிகரித்து வருவதையும் அரசு சுட்டிக் காட்டியுள்ளது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments