அவசர ஆக்சிஜன் ஆட்டோ..! கொரோனா நோயாளிகளுக்கு இலவசம்

0 1712
அவசர ஆக்சிஜன் ஆட்டோ..! கொரோனா நோயாளிகளுக்கு இலவசம்

கொரோனா நோயாளிகளுக்காக சென்னையில் இரு பட்டதாரி இளைஞர்கள் அவசர ஆக்சிஜன் இலவச ஆட்டோ சேவையை அறிமுகம் செய்துள்ளனர். உயிர் காக்கும் பணியில் இரவு - பகல் பாராது உழைத்து வரும் இளைஞர்களின் சேவை குறித்து விவரிக்கிறது, இந்த சிறப்பு 

பிரசவத்திற்கு இலவசம் என எழுதப்பட்டு இயங்கும் ஆட்டோக்களை போல,சென்னையில் கொரோனா நோயாளிகளுக்காக அவசர ஆக்சிஜன் இலவச ஆட்டோ சேவை வழங்கி வருகின்றனர்.

தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் வசந்தகுமார், சத்யராஜ் என்ற இரு இளைஞர்கள் இணைந்து, இரவு - பகல் பாராது, உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆக்சிஜன் சிலிண்டர் தேவை அதிகரித்துள்ள சூழலில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களும், கொரோனா பாதிப்பு தெரியாமல் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்வதற்குள் பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இக்கட்டான நேரங்களில் அவசர ஆம்புலன்ஸ் சேவை உடனடியாக கிடைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.

இது போன்ற நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே உதவி செய்ய காத்திருக்கின்றனர் இந்த இளைஞர்கள். கடமை கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை என்ற பெயரில் நண்பர்கள் இருவரும் தன்னார்வ இளைஞர்கள் பலரையும் இணைத்துக் கொண்டு, கொரோனா பேரிடர் காலத்தில் ஆக்சிஜன் ஆட்டோ சேவை வழங்க ஓடி ஓடி உதவி வருகின்றனர்.

ஆக்சிஜன் பொருத்திய இலவச ஆட்டோக்கள் மூலம் 126 கொரோனா நோயாளிகளின் உயிரை இவர்கள் இருவரும் காப்பாற்றியுள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் பொதுமக்களுக்கு முக கவசம், கிருமி நாசினி வழங்குவது, உணவு விநியோகம் என பல்வேறு உதவிகள் செய்து வந்த இவர்கள், தற்போது ஆக்சிஜனின் தேவையறிந்து அலுவலக பயன்பாட்டிற்கு வைத்திருந்த இரண்டு ஆட்டோக்களையும் ஆக்சிஜன் சிலின்டர் பொருத்திய இலவச ஆட்டோக்களாக மாற்றிவிட்டனர்.

செல்போனில் தகவல் சொன்னால், அடுத்த சில நிமிடங்களில், சம்பந்தப்பட்டவர்களின் இல்லம் விரையும் இக்குழுவினர், உரிய மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லும் பொறுப்பை

ஏற்றுக்கொள்கிறார்கள். அரசு மட்டுமல்லாது தன்னார்வலர்களும் இதுபோல கை கொடுத்தால், கொரோனா நோயாளிகளுக்கு
நிச்சயம் பலன் கிடைக்கும். இக்கட்டான சூழலில் உயிரை பணயம் வைத்து களமிறங்கி உள்ள இவர்களின் மருத்துவ சேவை, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments