கர்நாடகாவில் நேற்று முதல் 14 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு அமல்

0 1071
கர்நாடகாவில் நேற்று முதல் 14 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு அமல்

ர்நாடகாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த நேற்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு மிகக்கடுமையான முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் தினசரி கொரோனா புதிய பாதிப்புகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்த நிலையில், இதுவரை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடியூரப்பா, மக்கள் ஊரடங்கை மதித்து வீடுகளுக்குள் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதனிடையே சாலைகளில் போலீசார் கைகளில் லத்திகளுடன் பொதுமக்கள் மீது தடியடி நடத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

காய்கறி விற்றவர்கள், பழம் விற்றவர்கள் காலை பத்து மணிக்குள் கடைகளை அடைக்க வேண்டும் என்று கெடுபிடி செய்த போலீசார் தண்ணீர் பிடிக்க நின்றவர்களைக் கூட விட்டு வைக்காமல் தடியால் அடித்து விரட்டினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments