கொரோனா உதவியாக இந்தியாவுக்கு ரூ.110 கோடியை வழங்குகிறது டுவிட்டர்..!

0 3668
கொரோனா உதவியாக இந்தியாவுக்கு ரூ.110 கோடியை வழங்குகிறது டுவிட்டர்..!

கொரோனா நிவாரண நிதியாக இந்தியாவுக்கு சுமார் 110 கோடி ரூபாய் வழங்குவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை டுவிட்டரில் தெரிவித்துள்ள அதன் சிஇஒ ஜேக் பேட்ரிக் டோர்சே, மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இந்த தொகை பிரித்து வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கேர், எய்ட் இந்தியா மற்றும் சேவா இன்டர்நேஷல் யுஎஸ்ஏ ஆகியன இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களாகும். ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றை வாங்கி அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments