சென்னை விமான நிலையத்தில் ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்...

0 8853
சென்னை விமான நிலையத்தில் ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்...

செடிகளின் விதைகள் என்று குறிப்பிட்டு துபாயிலிருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் வந்த கொரியர் பார்சலில் இருந்து ஒரு கோடியே 20 லட்சம் மதிப்புள்ள தங்கத் துகள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் நேற்று வந்த கொரியர் பார்சல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். 

அப்போது சென்னை முகவரிக்கு வந்த ஒரு பார்சலில் பூ மற்றும் காய்கறி செடிகளின் விதைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறையினர் அந்த பார்சலை திறந்து பார்த்ததில் ஓட்ஸ் பாக்கெட்கள் மற்றும் குளிர்பானம் தயாரிக்கும் பவுடர்கள் அடங்கிய பாக்கெட்கள் இருந்தன.

அவைகளை உடைத்து பார்த்த போதுஅந்த ப் பாக்கெட்டுகளில் பவுடர்களுக்குள்  தங்கப்பொடி தூள்கள் கலந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவைகளை தண்ணீரில் கரைத்து,தங்கப்பொடி தூள்களை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்ததில் மொத்தம் இரண்டரை கிலோ தங்கப்பொடி தூள்கள் இருப்பது தெரிய வந்தது. இதன் சர்வதேச மதிப்பு 1 கோடியே 20 லட்சமாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments