கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவை பின்னுக்குத் தள்ளியது கர்நாடகா..! ஒரே நாளில் 39,305 பேருக்கு பாதிப்பு

0 3844
கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவை பின்னுக்குத் தள்ளியது கர்நாடகா..! ஒரே நாளில் 39,305 பேருக்கு பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி கர்நாடகா முதலிடத்தை பிடித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதில் இருந்தே, மகராஷ்டிரா பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், திங்கட் கிழமை பதிவான கொரோனா பாதிப்பு நிலவரப்படி, மகராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி கர்நாடகா முதலிடத்திற்கு வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் 37,236 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கர்நாடகாவில் 39,305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் மகாராஷ்டிராவை விட கர்நாடகாவில் அதிகரித்துள்ளது.

கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரு கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது. மாநிலத்தின் மொத்த உயிரிழப்பில், மூன்று பங்கு பெங்களூருவில் மட்டும் பதிவாகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments