”வளிமண்டல சுழற்சி காரணமாக 14-ம் தேதிவரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு” -வானிலை ஆய்வு மையம்

0 4132
”வளிமண்டல சுழற்சி காரணமாக 14-ம் தேதிவரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு” -வானிலை ஆய்வு மையம்

ளிமண்டல சுழற்சி காரணமாக, குமரி, நெல்லை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், தமிழகத்தில் 14ஆம் தேதிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, புதுக்கோட்டை தென்காசி, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இதனிடையே, வருகிற 14ஆம் தேதி தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் மாலத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும், மத்திய தெற்கு அரபிக் கடல் மற்றும் மாலத்தீவு பகுதிக்கு 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments