புதுச்சேரியில் 3 பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் : மத்திய அரசு அறிவிப்பு

0 5195
புதுச்சேரி சட்டசபைக்கு புதிதாக 3 நியமன MLA க்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

புதுச்சேரி சட்டசபைக்கு புதிதாக 3 நியமன MLA க்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத்திற்கு K. வெங்கடேசன்,  V.P ராமலிங்கம் மற்றும் R .B. அசோக் பாபு ஆகிய 3 பேர் நியமன MLA- க்களாக நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 இடங்களில், என். ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர்.

3 நியமன MLA க்கள் மூலம் தற்போது பாஜக எம்எல்ஏக்களின் பலம் பேரவையில் 9 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments