லேடீஸுக்கு 2 ரூபாய்..! ஜெண்ட்ஸ்ன்னாரூ10 ...! தனியார்பஸ்சலுகை..! ஆண்பாவம் மைசன்..!

0 7635
லேடீஸுக்கு 2 ரூபாய்..! ஜெண்ட்ஸ்ன்னாரூ10 ...! தனியார்பஸ்சலுகை..! ஆண்பாவம் மைசன்..!

தமிழகத்தில் சாதாரண கட்டணம் உள்ள நகர்புற அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் போட்டியை சமாளிக்கும் விதமாக நாமக்கல்லை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் தனது பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு கட்டணமாக 2 ரூபாயும், ஆண்களுக்கு 10 ரூபாயும் சலுகையுடன் வசூலிக்க தொடங்கியுள்ளார்.

தமிழகத்தில் சாதாரண கட்டணம் உள்ள நகர்புற அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் எஸ்.எம்.ஆர். என்ற தனியார் பேருந்து உரிமையாளர் குமரேசன் என்பவரும் தனது பேருந்தில் பெண்களுக்கு சலுகை கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்வதற்கு இதுவரை 15 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பெண்களுக்கு அதிக பட்ச கட்டணமாக 2 ரூபாயும் ஆண்களுக்கு சலுகை கட்டணமாக 10 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக அறிவித்துள்ள பேருந்து நிர்வாகம்,
2 ரூபாய் கட்டணமாக கொடுக்கின்ற பெண் பயணிகள் நாமக்கல் முதல் மோகனுர் வரையிலான பேருந்து நிறுத்தங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்

தற்போது ஊரடங்கு என்பதால் பேருந்து இயக்கப்படவில்லை என்றும் ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டபின்னர் இதே கட்டண சலுகையுடன் பயணச்சீட்டு வழங்கப்படும் என்று கூறும் பேருந்து உரிமையாளர் குமரேசன், சொன்னதை செய்யும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல்வாக்குறுதியில் கூறியதை போல டீசல் மீதான தமிழக அரசின் வாட்வரியை உடனடியாக குறைத்து அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே நேரத்தில் கிராமப்புறமோ, நகர்புறமோ, தமிழ் நாடு அரசு பேருந்தோ தனியார் பேருந்தோ பெண்கள் கூட்டம் பெரிதாக ஏறவில்லையென்றால் கலெக்ஸன் டல்லடித்து விடும். கடைசியில் காஸ்ட்லி பேருந்தை காயலான் கடைக்கு தள்ளி விடும் நிலை வந்துவிடும் என்ற உண்மையை உணர்ந்ததால், தனியார் பேருந்து உரிமையாளர் புத்திசாலிதனமாக கட்டணத்தை குறைத்துள்ளதாகவும், 10 ரூபாய் கொடுத்து பயணம் செய்யும் அளவுக்கு ஆண்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள் ? என்று அந்த பகுதி இளைஞர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இவரை போலவே தமிழகத்தில் உள்ள மற்ற தனியார் பேருந்து உரிமையாளர்களும் கட்டண சலுகை வழங்குவார்களா ? என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments