ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் ஒற்றுமை நீடிப்பு என பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்

0 8965
எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, சென்னையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, சென்னையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்தார்.

கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ் இல்லத்தில் மாலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ. பன்னீர் செல்வம் பொன்னாடை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார்.

பதிலுக்கு, ஓ. பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை அணிவித்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக ஒற்றுமையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்ட தலைவர்கள் சந்திப்பு நிகழ்ந்ததாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments