மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர் நடைமுறை தொடக்கம்.. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல்

0 3484
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர் நடைமுறை தொடங்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர் நடைமுறை தொடங்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான கடன் ஒப்பந்தம் மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். 

அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி இந்தியா மற்றும் ஜப்பான் அரசுகள் இடையே ஆயிரத்து 536 கோடியே 91 லட்ச ரூபாய் கடன் ஒப்பந்தமாகி  கையெழுத்தானது என்றும், டெண்டர் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments