தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை தமிழக அரசே ஏற்றுக் கொள்ள வகை செய்யும் அரசாணை வெளியீடு

0 4883
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்றுக் கொள்ள வகை செய்யும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தனியார் மருத்துவமனைகளில்  கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்றுக் கொள்ள வகை செய்யும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றதும் வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக, தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை செலவை காப்பீடு திட்டத்தில் அரசே ஏற்கும் என உறுதி அளித்திருந்தார்.

இதன்படி, அனைத்து விதமான கொரோனா சிகிச்சைக்கான கட்டணம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். 

இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது. கூடுதலாக தனியார் மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு, விரைந்து அங்கீகாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments