தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் மு.அப்பாவு போட்டி... துணைத் தலைவராக கு. பிச்சாண்டி போட்டி

0 3907

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் மு.அப்பாவு, துணைத்தலைவர் பதவிக்கு கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தலில் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ, மு.அப்பாவு மற்றும் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியிடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதன் காரணமாக எதிர்கட்சி தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்த வாய்ப்பில்லை என்பதால் இருவரும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments