டெல்லியில் 25 நாட்களுக்கு பின் குறைந்த கொரோனா பாதிப்பு...

0 6584
டெல்லியில் 25 நாட்களுக்கு பின் புதிதாக கொரோனாவால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை 19.10 சதவீதமாக குறைந்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் 25 நாட்களுக்கு பின் புதிதாக கொரோனாவால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை 19.10 சதவீதமாக குறைந்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 36 ஆயிரத்து 218ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 319 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,663ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் 25 நாட்களுக்கு பின் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments