தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,978 பேருக்கு கொரோனா

0 2454
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,978 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வந்த போதிலும் ஒரே நாளில் சுமார் 21 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். மாநிலம் முழுவதும்  1 லட்சத்து 52 ஆயிரத்து 389  பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 28,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெருந் தொற்று பாதிப்பிலிருந்து, 20,904 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் 24 வயது இளைஞர் உள்பட மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 232 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள், சென்னையில் புதிதாக 7149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கோவையில் 2781 பேரும் செங்கல்பட்டில் 2181 பேரும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருவள்ளூர் - 1008 , மதுரை - 1024 , கிருஷ்ணகிரி - 895, திருச்சி - 869 , திருநெல்வேலி - 862, தஞ்சாவூர் - 831, தூத்துக்குடி - 777,ஈரோடு - 771, திருப்பூர் - 746 மற்றும் காஞ்சிபுரத்தில் 710 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஒரே நாளில், 12 வயதுக்குட்பட்ட 959 சிறுவர், சிறுமிகள் புதிதாக கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் 1,52,389 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments