தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய டிவிஎஸ், ஓலாம் நிறுவனங்கள்

0 2407
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய டிவிஎஸ், ஓலாம் நிறுவனங்கள்

டிவிஎஸ் நிறுவனம் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், ஓலாம் நிறுவனம் 300 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளன.

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மூலமாக 18 கோடி ரூபாய் மதிப்பிலான 1600 ஆக்சிஜன் செறிவூட்டிகளைத் தமிழகஅரசுக்கு வழங்குகிறது.

முதற்கட்டமாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான 500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அறக்கட்டளைத் தலைவர் ஸ்வரண்சிங், டி.வி.எஸ் துணைத் தலைவர் சேதுராமன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரிடம் வழங்கினர்.

சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை வழங்கிய கொரோனா நிவாரணப் பொருட்கள் ஏற்றிவந்த வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தார்.

ஓலாம் நிறுவனத்தின் சார்பில் 300 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அந்நிறுவனத்தின் அதிகாரி தியாகராஜன், சிங்கப்பூர் நாட்டுத் தூதர் பாங் காக் டியான் ஆகியோர் முதலமைச்சரிடம் வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments