கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட போட்டிகள் இந்தியாவில் நடக்க வாய்ப்பில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி

0 7395
கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட போட்டிகள் இந்தியாவில் நடக்க வாய்ப்பில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல்லின் எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடக்க வாய்ப்பில்லை என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதை கூறிய அவர்,முடங்கிய ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு நடக்குமா என்பதே சந்தேகம் என கூறினார்.

கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்யும் நகரங்களில் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் உள்ளதால் போட்டிகளை நடத்தி முடிப்பது சிரமம் என்று அவர் தெரிவித்தார்.

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த தயார் என்று இலங்கையும், இங்கிலாந்தும் கூறி வரும் நிலையில் அதற்கும் வாய்ப்பில்லை என கங்குலி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments