டெல்லியில் கொரோனா தடுப்பு மருந்து குறைந்த அளவே கையிருப்பு உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

0 734
டெல்லியில் கொரோனா தடுப்பு மருந்து குறைந்த அளவே கையிருப்பு உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

டெல்லியில் கொரோனா தடுப்பு மருந்து குறைந்த அளவே கையிருப்பு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகப் பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் டெல்லியும் ஒன்றாகும். அங்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின், கோவாக்சின் மருந்து ஒருநாளுக்கும், கோவிஷீல்டு மருந்து 4 நாளுக்கும் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகத் தெரிவித்தார்.

அதனால் தேவையான அளவு தடுப்பு மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments