இங்கிலாந்தில் மே 17 முதல் 3 ஆம் கட்ட தளர்வுகள் அமல்

0 2359

ங்கிலாந்தில் ஊரடங்கின் அடுத்த கட்ட தளர்வை பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று அறிவிக்க உள்ள நிலையில், எச்சரிக்கையுடன் மக்கள் பரஸ்பரம் கட்டித் தழுவவும், மதுச்சாலைகளில் வாடிக்கையாளர்களுக்கு மது விநியோகம் நடத்தவும் அனுமதி அளித்துள்ளார்.

பல மாதங்கள் நீண்ட ஊரடங்கை நான்கு கட்டங்களாக விலக்கும் அறிவிப்பை கடந்த பிப்ரவரியில் போரிஸ் ஜான்சன் வெளியிட்டார்.

அதிவிரைவு தடுப்பூசி திட்டத்தால் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பும் இறப்பு எண்ணிக்கையும் குறைந்து வருவதால் இந்த முடிவை அவர் எடுத்தார்.

அதன்படி வரும் 17 ஆம் தேதி முதல் பல மாதங்களுக்குப் பிறகு 6 பேர் அல்லது இரண்டு குடும்பத்தினர் வீடுகளிலோ, விடுதிகளிலோ சந்தித்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.

திரையரங்குகள், பப்கள்,உணவு விடுதிகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம்.

இந்த தளர்வுகள் இங்கிலாந்துக்கு மட்டுமே பொருந்தும். ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் நிர்வாகங்கள் அவரவர் தேவைக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments