ஆப்கானிஸ்தான் பள்ளி அருகே வெடிகுண்டு தாக்குதலில் பலியான மாணவிகள் எண்ணிக்கை 58 ஆக உயர்வு

0 1277
ஆப்கானிஸ்தான் பள்ளி அருகே வெடிகுண்டு தாக்குதலில் பலியான மாணவிகள் எண்ணிக்கை 58 ஆக உயர்வு

ப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், பள்ளி அருகே நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த மாணவிகள் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த சனிக்கிழமை மாலை, சையது உல் சுகாதா (Sayed ul Shuhada) என்ற பள்ளியை விட்டு ஏராளமான மாணவிகள் வெளியேறி கொண்டிருந்தனர்.

அப்போது பள்ளியின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் உயிரிழந்த மாணவிகள் பலரும் 15 வயதுக்குட்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த கொடூர தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகளே காரணம் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் இதற்கு தலிபான் தீவிரவாத அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments