முழு ஊரடங்கு காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவையில் கட்டுப்பாடு

0 2146
முழு ஊரடங்கு காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவையில் கட்டுப்பாடு

முழு ஊரடங்கு காரணமாக புறநகர் மின்சார ரயில்களில் முன்கள மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலேயே புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன் காரணமாக புறநகர் ரயில்களில் முன்கள மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் பயணிக்கலாம் எனவும், அவர்களுக்கு மட்டுமே பயணச்சீட்டு மற்றும் சீசன் டிக்கெட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments