மேற்கு வங்கத்தில் நாரதா டேப் ஊழல் புகாருக்கு ஆளானவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்

0 1845
மேற்கு வங்கத்தில் நாரதா டேப் ஊழல் புகாருக்கு ஆளானவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்

நாரதா டேப் ஊழல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த, ஆளுநர் ஜக்தீப் தங்கார் அனுமதி வழங்கிய 2 பேர், மேற்கு வங்கத்தில்,  அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். 

கடந்த 2014 ல் டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்ற பத்திரிகையாளர் ஒருவர் தம்மை தொழிலதிபர் என கூறி, அங்கு முதலீடு செய்ய உதவுமாறு திரிணமூல் அமைச்சர்கள் 7 பேர்,உள்ளிட்ட பலருக்கு பணம் கொடுத்து,அதை வீடியோவாக பதிவு செய்தார்.

இந்த வீடியோ 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சுப்ரதா முகர்ஜி,  பிர்ஹாத் ஹக்கீம் ஆகிய அமைச்சர்களும் அடக்கம்.

இவர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ள  ஆளுநர் அவர்களுக்கே  மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments