நிலம் ஒதுக்கிக் கொடுக்காத 100 பேருக்கு ரூ. 25,000 இழப்பீடு : மனித உரிமை ஆணையம் உத்தரவு

0 1088
நிலம் ஒதுக்கிக் கொடுக்காத 100 பேருக்கு ரூ. 25,000 இழப்பீடு : மனித உரிமை ஆணையம் உத்தரவு

வீட்டுமனைப் பட்டா வழங்கி 25 ஆண்டுகளுக்கு மேல் நிலத்தை ஒதுக்காததால் பாதிக்கப்பட்ட 100 பேருக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், மூன்று மாதங்களில் நிலத்தை அளந்து ஒதுக்கவும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ராஜநகரம் என்னும் ஊரில் ஆதிதிராவிடர்கள் 100 பேருக்குத் தலா மூன்று சென்ட் நிலத்துக்கான வீட்டுமனைப் பட்டா 1994 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுக்கு மேலாகியும் நிலத்தை அளந்து ஒதுக்காதது குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில் மக்கள் புகார் அளித்தனர்.

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், பட்டா வழங்கி 25 ஆண்டுகளாக நிலத்தை அளந்து ஒதுக்காதது கடமை தவறிய, மனித உரிமையை மீறிய செயல் எனத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்கவும், மூன்று மாதங்களில் நிலத்தை அளந்து ஒதுக்கவும் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments