வேலைக்கு வந்த இடத்தில் காதல்: உரிமையாளரிடம் போட்டு கொடுத்த நண்பன்; கொலை செய்து பழி தீர்த்த காதலன்!

0 10226

திருப்பூரில் வேலைக்கு வந்த இடத்தில் காதலில் ஈடுபட்டது,குறித்து நிறுவன உரிமையாளரிடத்தில் கூறியதால், நண்பனை கொலை செய்த வட மாநில இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நாரணாபுரம் கிராமத்துக்கு உட்பட்ட அம்மாபாளையம் பி.ஏ.பி வாய்க்கால் அருகே விவசாய நிலத்தில் வாலிபர் சடலம் ஒன்று கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் உத்தரவின் பேரில் பல்லடம் டி.எஸ்.பி.ஸ்ரீ ராமச்சந்திரன் மேற்பார்வையில் கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. விசாரணையில் அம்மாபாளையம் பகுதியில் தனியார் நூற்பாலை ஒன்றில் வேலை செய்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விஷால் பால் என்பவர் கொலை செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது. விசாணையில் மேலும், பல தகவல்கள் கிடைத்தன.


விஷால் பாலும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மோணு குமார் பால் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு பல்லடம் பகுதியில் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தனர். அங்கு, செய்து வந்த பெண் ஒருவருடன் மோணு குமார் பாலுக்கு காதல் மலர்ந்துள்ளது. நண்பர்,விஷால் பால் வேலைக்கு வந்த இடத்தில் காதல் தேவையில்லாதது. வேலையில் கவனம் செலுத்துமாறு மோனுகுமாருக்கு அறிவுரை கூறியுள்ளார். மோனு குமார் கேட்காததால்,நிறுவன முதலாளியிடம் மோனு குமார் பாலின் காதல் விவகாரம் குறித்து விஷால்பால் கூறியுள்ளார். தொடர்ந்து, மோனு குமார் பால் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இதனால் விஷால் பால் மீது மோனு குமார் பாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், பல்லடம் அம்மாபாளையத்தில் உள்ள வேறு ஒரு நிறுவனத்தில் மோனுகுமார் வேலைக்கு சேர்ந்துள்ளான். தன் காதல் விவகாரத்தில் தலையிட்ட விஷால்பாலை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளான். இரு நாள்களுக்கு முன், விஷால் பாலை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மோனு குமார் பால், பழைய விஷயங்களை மறந்து விடுவோம். நல்ல நண்பர்களாக இருப்போம் என்று கூறி மது குடிக்க அழைத்துள்ளான். மது குடித்து போதையில் இருந்த போது விஷால் பாலின் கைகளைக் கட்டி தரையில் படுக்க வைத்து கல்லை தூக்கி தலையில் போட்டு முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டான்.

விஷால் பாலின் செல்போன் எண்ணை வைத்து மோனு குமார் பாலை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் தனது காதல் தோல்விக்கும் வேலை இழப்புக்கும் காரணமான விஷால் பாலை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள்ளாக பல்லடம் போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments