கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 3947
கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மிழகத்தில் அரிசி குடும்பஅட்டைக்காரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைக்காரர்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகையாக நாலாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.

அதை நிறைவேற்றும் வகையில் 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைக்காரர்களுக்கு மே மாதத்தில் முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கும் ஆணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையொப்பமிட்டார்.

இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரிசி குடும்ப அட்டைக்காரர்களுக்கு முதல் தவணை கொரோனா நிவாரண உதவித்தொகையாக 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

அடையாளமாக 7 குடும்பங்களுக்கு 2000 ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறைஅமைச்சர் பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நியாயவிலைக் கடைகள் மூலம் மே 15 முதல் காலை 8 மணி முதல் நண்பகல் வரை நிவாரண உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக இன்று முதல் 3 நாட்கள் நியாயவிலைக் கடைப் பணியாளர்களால் டோக்கன்கள் வழங்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments