மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரசின் 43 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு

0 1976
மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரசின் 43 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு

மேற்கு வங்கத்தில் மம்தா அமைச்சரவையில் திரிணாமூல் காங்கிரசைச் சேர்ந்த 43 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

மேற்கு வங்கச் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளில் வெற்றிபெற்றுத் தொடர்ந்து மூன்றாம் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.

மே 5 அன்று மம்தா பானர்ஜி முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்த 43 பேர் இன்று கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.

அவர்களுக்கு ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவியேற்பு உறுதிமொழி செய்துவைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments