அத்தியாவசிய பணிக்காக சென்னையில் இன்று முதல் 200 மாநகரப் பேருந்துகள் இயக்கம் - மாநகர் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

0 7508
அத்தியாவசிய பணிக்காக சென்னையில் இன்று முதல் 200 மாநகரப் பேருந்துகள் இயக்கம் - மாநகர் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

மிழகம் முழுவதும் 14 நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளுக்கு செல்வோருக்காக நாள்தோறும் 200 பேருந்துகள் இயக்கப்படுமென மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால்விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு கட்டுப்பாடின்றி அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தலைமைச் செயலக அலுவலர்கள், பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் பணிக்கு வந்து செல்ல ஏதுவாக, சென்னையில் இன்று முதல் முதற்கட்டமாக 200பேருந்துகள் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுமெனவும், தேவைக்கு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments