மார்ச் 2022 ஆண்டிற்க்குள் 36 கோடி இந்தியர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்த இலக்கு -ரஷ்யா தகவல்

0 1239
மார்ச் 2022 ஆண்டிற்க்குள் 36 கோடி இந்தியர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்த இலக்கு -ரஷ்யா தகவல்

டுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை 36 கோடி இந்தியர்களுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஸ்புட்னிக் மருந்து தயாரித்த ரஷ்ய நேரடி முதலீட்டுக் கழகம் 850 மில்லியன் டோஸ் தயாரிக்க 5 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் மருந்துகள் வேறு நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படும் என தெரிவித்துள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 238 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்யப்படும் என்றும் ரஷ்ய நேரடி முதலீட்டுக் கழகம் கூறியுள்ளது.

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சினைத் தொடர்ந்து ஸ்புட்னிக் மருந்துக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments