மிதிவண்டி வாங்க வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவனுக்கு புது மிதிவண்டி வாங்கிக் தந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!

0 4308
மிதிவண்டி வாங்க வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவனுக்கு புது மிதிவண்டி வாங்கிக் தந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!

துரையில் சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய 7 வயது சிறுவனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக சைக்கிள் வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த அமரேஸ் இளங்கோவன் - தீபா தம்பதியின் ஒரே மகனான ஹரிஸ்வர்மன், சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்திருந்தான்.

இதனை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுவனின் செயலை பாராட்டும் விதமாக மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. கோ.தளபதி மூலம் சிறுவனுக்கு ஒரு புதிய சைக்கிளை வாங்கி கொடுத்து போனில் நேரடியாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது மழலை பேச்சில் வாழ்த்துகளை தெரிவித்த சிறுவன் ஹரீஸ்வர்மன், தமக்கு சைக்கிள் வாங்கி கொடுத்தமைக்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments