சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி பொறுப்பேற்பு..!

0 3472
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி பொறுப்பேற்பு

சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக மூத்த I A S அதிகாரி ககன்தீப் சிங் பேடி பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக தமிழக வேளாண்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடியை சென்னை மாநகராட்சி ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து புதிய ஆணையராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராகவும், மதுரை மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றிய ககன்தீப் சிங் பேடி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றி, அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments