"நாடு முழுவதும் 17 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி விநியோகம்" -மத்திய அரசு தகவல்

0 1497
"நாடு முழுவதும் 17 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி விநியோகம்" -மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் இதுவரை 17 கோடியே 56 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்னும் 72 லட்சம் டோஸ் மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் மேலும் 46 லட்சம் டோஸ் மருந்துகள் அடுத்த 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை விரைந்து அனுப்புவதற்கு ராணுவத்தைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், சில மாநிலங்கள் தடுப்பூசிகளை வீணாக்குவது கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments