கொரோனா நிவாரண நிதி :முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்..!

0 3586
கொரோனா நிவாரண நிதி :முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்..!

இரண்டு கோடியே 7 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு,  கொரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், கொரோனா நிவாரணத் தொகை வழங்குதல் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி 2 கோடியே 7 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில், கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகை முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நண்பகல் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, வருகிற 15ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் நிவாரண உதவித்தொகை விநியோகிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக கூட்டம் சேரக்கூடாது என்பதால், உணவுத்துறை அதிகாரிகள் இன்று முதல் 3 நாட்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி நாளொன்றுக்கு 200 பேருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. விநியோகிக்கப்படும் டோக்கனில் ரேஷன் கடையின் எண், பெயர், அட்டைதாரர் பெயர், நிவாரண நிதி வழங்கும் தேதி மற்றும் நேரம் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த டோக்கனை வழங்கி 15ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நிவாரணத் தொகையைப் பெற்றுச் செல்ல தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments