இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3,66,317 பேருக்கு புதிதாக கொரோனா..!

0 2612
இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 3,66,317 பேருக்கு புதிதாக கொரோனா..!

ந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிரி தாக்குதலால் 3 ஆயிரத்து 747 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் இதுரை 2 கோடியே 26 லட்சத்து 62 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும், அவர்களில் 2 லட்சத்து 46 ஆயிரம் பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 48 ஆயிரத்து 400 பேருக்கும், கர்நாடகாவில் 47 ஆயிரத்து 930 பேருக்கும் பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 4 ஆயிரத்து கடந்து காணப்பட்டது.

அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்குப் பிறகு இந்தியா இறப்பு எண்ணிக்கை உலகில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள ஐந்து நாடுகளில், இந்தியாவில் மட்டுமே தினசரி இறப்புக்கள் அதிகரித்து வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments