சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்

0 1415
சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்

சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக மூத்த IAS அதிகாரி ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் , அவருக்குப் பதிலாக சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக தமிழக வேளாண்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராகவும், மதுரை மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றி இருந்த ககன்தீப் சிங் பேடி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றி, அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments