தமிழகத்தில் மே 24க்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

0 7100

மிழகத்தில் மே 24ஆம் நாளுக்குப் பின் ஊரடங்கை நீட்டிக்கும் நிலை வராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாளை முதல் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த உள்ள நிலையில், உணவுப் பொருட்கள், மருந்துகள், ஆக்சிஜன் வழங்கல் தடையின்றி இருக்கவும், இன்றியமையாப் பொருள் உற்பத்தி, வழங்கலை உறுதிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தொழில் நிறுவனங்களுக்கும், வணிகர்களுக்கும் அரசிடம் இருந்து எந்தெந்த வகைகளில் ஒத்துழைப்பும் உதவிகளும் தேவை என்பதைக் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

முழு ஊரடங்கால் தொழில் நிறுவனங்களுக்கும், வணிகர்களுக்கும் ஏற்படும் இழப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments