தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது - மத்திய அரசு

0 5012
தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது - மத்திய அரசு

டுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

ஆனால் இது 0.03 முதல் 0.04 என்ற மிக சிறிய விகித்திலேயே இருக்கும் எனவும், அப்படி தொற்று பாதித்தவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படும் எனவும் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

உடலுக்குள் கொரோனா வைரஸ் நுழைந்தாலும், அது பல்கிப் பெருகி, பாதிப்பு ஏற்படுத்துவதை தடுப்பூசி தடுக்கும் என அது கூறியுள்ளது.

அதே நேரம் சோதனை முடிவுகள் பாசிடிவ் ஆக வந்தால் மற்றவர்களுக்கு தொற்று பரவும். எனவே தடுப்பூசி போட்டபிறகும் முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments