நாளை முழு ஊரடங்கு அமலாவதால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

0 4833
நாளை முழு ஊரடங்கு அமலாவதால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து முடிவு செய்ய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

அக்கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் திங்கட்கிழமை காலை மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாளை முதல் முழு ஊரடங்கு அமலாகவுள்ளதால் கூட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலகங்கா காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments