சென்னை, வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரு செவிலியர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

0 6971
சென்னை, வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரு செவிலியர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

சென்னை மற்றும் வேலூரில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இரு செவிலியர்கள் சிகிச்சைப் பலனின்றி பலியாகியுள்ளனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருதவியல் துறையில் செவிலியராக பணியாற்றி வந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இந்திரா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதேபோல் வேலூர் அரசு மருத்துவமனைக் கல்லூரியில் செவிலியராக பணியாற்றி வந்த பிரேமா வெண்டிலேட்டர் உதவியுடன் கொரோனா சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும் மருத்துவர், செவிலியர் பாதுகாப்பை உறுதி செய்யவும் செவிலியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments