அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் வளர்ப்பு நாய் உயிரிழப்பு

0 2454
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் வளர்ப்பு நாய் உயிரிழப்பு

மெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் வளர்ப்பு நாயான போ (Bo) நேற்று உயிரிழந்தது.

அமெரிக்க அதிபர் ஒபாமா, போ மற்றும் சன்னி என்ற பெயருடைய போர்ச்சுகீசிய ரக நாய்களை வளர்த்து வந்தார். அதில், 12 வயதான போ, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மறைந்த மாசசூசெட்ஸ் செனட்டர் எட்வர்ட் கென்னடி கடந்த, 2009 ஆம் ஆண்டு போவை, ஒபாமாவுக்கு பரிசாக வழங்கினார்.

இந்நிலையில் போ உயிரிழந்துவிட்டதாகவும், தனது குடும்பம் உண்மையான நண்பரையும், விசுவாசமான தோழனையும் இழந்துவிட்டதாகவும் ஒபாமா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments