டெல்லியில் முழு ஊரடங்கு மே-17 வரை நீட்டிப்பு..!

0 1997
டெல்லியில் முழு ஊரடங்கு மே-17 வரை நீட்டிப்பு..!

டெல்லியில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதலமைச்சர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊடரங்கின் போது மெட்ரோ ரயில்கள் இயங்காது என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவியதால் கடந்த மாதம் 19 ஆம் தேதி டெல்லியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அது இப்போது மே மாதம் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மருத்துவ துறை அதிக வேலைப்பளுவால் தள்ளாடுவதால் ஊரடங்கை நீட்டிப்பது அவசியம் என டெல்லி அரசு கருதுகிறது. அதே நேரம் டெல்லியில் கொரோனா தொற்று பரவல் விகிதம் கடந்த 2-3 நாட்களில் 35 ல் இருந்து 23 சதவிகிதமாக குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments